பிப்.12ல் மாநில மாநாடு; இளைஞர்களே அணிதிரள்வீர்!!
![](https://static.wixstatic.com/media/d572ed_f3de602187eb4e4b94702eb500315cf9~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_f3de602187eb4e4b94702eb500315cf9~mv2.jpg)
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரஸ் கிளப்பில் நடந்தது. மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மீடியாக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஒரு சில மீடியாக்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருநங்கை சங்க தலைவி மலாய்க்கா, திரு.டிராபிக் ராமசாமி, மற்றும் கல்வியாளர் ஸ்டெல்லா பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு பெற்று, மத்திய மாநில அரசுகளை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி பெரும் வெற்றி கண்ட நமது இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வெற்றி விழாவை கொண்டாட சென்னை சரித்திரத்தில் முதல் முறையாக மாபெரும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும், நடத்திக்காட்டுவோம். அதே போல் போராட்டத்தில் கைதான நமது சகோதரர்களை அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் வெகு விரைவில் நமது கட்சி சார்பாக செயல்படுத்தப்படும்.
நமது கட்சியை உருவாக்கியவர்கள் 4 நபர்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பை உருவாக்குவது தான் இந்த குழுவின் நோக்கம். கட்டமைப்பு அமைக்கப்பட்ட பின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ஒரு கூட்டு தலைமையை தேர்தெடுப்பார்கள்.
அதன் பிறகு அவர்கள் தான் கட்சியை வழி நடத்துவார்கள். நிச்சயம் நமது கட்சியின் தலைவர் ஜனநாயக முறைப்படி தான் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிப்ரவரி 12ம் தேதி மாநில அளவிலான நமது கட்சியின் முதல் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை அளிக்குமாறு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அணிதிரள வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments