இயற்கை அழிய விடமாட்டோம், இரும்பு பாலம் தேவையில்லை : மனித சங்கிலி போராட்டம்!!
பெங்களூரு சிட்டியில் இருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து கட்டுப்படுத்தும் நோக்கில், பல கோடி ரூபாய் செலவில் இரும்பு பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணியை அரசு துவக்கியது.
இந்த இரும்பு பாலம் கட்ட அந்த சாலையிலுள்ள 112 மரங்கள் வெட்ட முடிவு செய்து, அதற்கான பணி துவங்கியது. இந்நிலையில், பெங்களூருவில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு என்பது கார்டன் சிட்டியாக திகழ இங்குள்ள இயற்கை மரங்களே காரணம். இப்படி மரங்களை வெட்டி பெங்களூருவில் இயற்கை சூழ்நிலையை மாற்ற அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், மனித சங்கிலி போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Comments