டூபிளசிஸ், டிவில்லியர்ஸ் அதிரடியில் சிக்கி வீழ்ந்தது இலங்கை!
- crazynewschannel
- Feb 8, 2017
- 1 min read

இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கேப்டவுன் நியூலேண்டில் நேற்று நடைபெற்ற இலங்கை தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய டு பிளிசிஸ் டி காக் உடன் இணைந்து இலங்கை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். டி காக் 46 பந்தில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 62 பந்தில் 64 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
டு பிளிசிஸ் 185 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட் ஆனார். இவரது அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து 368 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிக்வெல்லா 58 ரன்களும், தரங்கா 119 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அவர்களை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றியதால் 48.1 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Comentarios