‘‘பெரிய கட்சிகள் உடையுது; ஆட்சியைப் பிடிக்க புதிய கட்சி’’ ஜோதிடர் கணிப்பு!
வரும் தமிழ் புத்தாண்டான ஹேவிளம்பி வருடத்தில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் புதிய கட்சி உதயமாகும் என்று ஜோதிடர் புளியங்குடி செல்வம் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது:-
தற்போது நடந்து வரும் துர்முகி வருடத்தில், மனிதர்களின் அழகு முகங்கள் எல்லாம், சமாளிக்க முடியாத பல்வேறு பிரச்சினைகளால் துர்முகங்களாக மாறி விட்டது.
ஆனால், வரும் ஹேவிளம்பி வருடத்தில், அதாவது “ஹே” என்றால் மகிழ்ச்சி “விளம்பி” என்றால் எடுத்து கூறுதல் என்று பொருள்.
எனவே வரும் தமிழ் புத்தாண்டில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியை எடுத்துக் கூறும் வகையில், நிறைவோடு வாழ வழி பிறக்கும்.
தற்போது மீன ராசியில் இருக்கும் செவ்வாய், மேஷத்திற்கு வரும் நாள் முதல், பண பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
அத்துடன் வரும் ஏப்ரல் மாதத்தில் பிறக்கும் தமிழ் வருடத்தில், தமிழ் நாட்டில் புதிய சின்னம் கொண்ட, புதிய கட்சி
ஒன்று உருவாகும். அதுவே தமிழத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.
துர்முகி வருடத்தோடு, செல்வாக்கு பெற்ற இரு கட்சிகள் உடைந்து காணாமல் போகும். மக்கள் வெறுப்புக்கு ஆளான துர்முகங்கள் அனைத்தும் மறைந்து போகும்.
மொத்தத்தில் வரும் தமிழ் புத்தாண்டான “ஹே விளம்பி” தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரப்போகும் வருடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Comments