சென்னைக்கு மே மாதம் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.!
சென்னை மாநகரத்திற்கு மே மாதம் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணா நதி நீர், மற்றும் வீராணம் ஏரியில் இருந்து விநியோகம் செய்யப்படும் நீர் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் சென்னை மாநகரத்திற்கு வழங்கப்பட்டு வந்த வீராணம் ஏரியிலும் நீர் இருப்பு குறைந்து வருகின்றன.
மேலும், ஆந்திரா மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதிநீரின் கனஅடி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்ற ஆண்டை காட்டிலும் மே மாதம் சென்னை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகமாகவே காணப்படும். இதற்கு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments