சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ‘எச்சரிக்கை போர்டு’; கிராமத்தினர் அதிரடி !!
![](https://static.wixstatic.com/media/d572ed_33077f60829f4c70bea81ab115f6c73c~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_33077f60829f4c70bea81ab115f6c73c~mv2.jpg)
ஜெயலலிதாவின் மறைவையொட்டி, முதல்வராக பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர். இதனைத்தொடர்ந்து கட்சியின் பொறுப்பும் ஆட்சியின் பொறுப்பும் ஒருவர் கையில் இருக்கவேண்டும் என சசிகலா ஆதரவு அணியினர் விரும்பினர்.
பின்னர் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். ஆனால், சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் பல எதிர்ப்புகளை தெரிவித்துவந்தனர்.
தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ், திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியானத்தை கலைத்த ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக பேட்டி ஒன்றை கொடுத்தார்.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த எம்எல்ஏக்கள் போயஸ் கார்டன் விரைந்தனர். அங்கிருந்து, அனைத்து எம்எல்ஏக்களையும் கல்பாக்கம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் சசிகலா ஆதரவாளர்களால் சில நாட்கள் அடைத்து வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்எல்ஏக்களின் தொகுதியில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆங்காங்கே போஸ்டர்களும், தகவல் பலகைகளும் வைக்கப்பட்டன. சமூகவலைத்தளங்களிலும் சசிகலாவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.
இந்நிலையில், கிராமம் ஒன்றின் சாலையோரத்தில், ‘‘சசிகலாவை ஆதரித்த எம்எல்ஏவே இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைக்காதே, மீறினால் எங்கள் காலணி பேசும்’’ என்று எழுதிய தகவல் பலகையை மக்கள் வைத்துள்ளனர். இந்த எச்சரிக்கை பலகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments