மீண்டும் இணைந்த விஷால், வரலட்சுமி!
- crazynewschannel
- Jun 1, 2017
- 1 min read

விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாகவும், அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஷால், வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த ‘மதகஜ ராஜா’ படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக விஷால், வரலட்சுமி காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே பிரேக்-அப் ஏற்பட்டதாகவும் வதந்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது, இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்து அனைத்து வதந்திகளையும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
Comments