‘‘2ம் வாய்ப்பு அதிமுகவுக்கு இல்ல; அடுத்த வாய்ப்பு திமுகவுக்குத்தான்’’ ‘‘சட்டம் சொல்கிறது’’ வழக்கறிஞர
![](https://static.wixstatic.com/media/d572ed_4e35164ba4f54adfb2d77ffac11888e0~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_4e35164ba4f54adfb2d77ffac11888e0~mv2.jpg)
தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் சென்னை வருகையை அடுத்து, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளரும் அவரை சந்தித்து பேசினர். ஆளுநரை சசிகலா சந்தித்தபோது, அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சந்திப்புகள் முடிந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சட்ட ரீதியாக என்ன நடக்கும் என வழக்கறிஞர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில், ‘சட்டப்படி ராஜினாமா திரும்பப்பெறப்பட்டால் ஓபிஎஸ் தான் முதல்வர். இரண்டாம் வாய்ப்பு அதிமுகவிற்கு வழங்கப்படமாட்டாது.
ஓபிஎஸ் தலைமையிலான அமைச்சரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்து 2 மாதங்களே ஆன நிலையில், 6 மாதத்திற்கு பிறகுதான் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதில் முடிவு எட்டப்படாத பட்சத்தில், அடுத்த வாய்ப்பு எதிர்கட்சிக்குத் தான் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே 132 எம்எல்ஏக்களும் பதவியை காப்பாற்றி கொள்ள பன்னீர்செல்வத்தை ஆதரித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
Комментарии