சசிகலா சபதத்தால் நடுக்கத்தில் இருக்கும் வளர்மதி , கோகுலஇந்திரா – பயத்தில் வீட்டிற்குள்ளேயே தஞ்சம்!
- crazynewschannel
- Feb 20, 2017
- 1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் சசிகலா எடுத்துக்கொண்ட சபதத்தால் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் கதிகலங்கிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைக்கு செல்லும் முன்பாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதி முன்பு வணங்கி, மூன்று முறை கையால் ஓங்கி அடித்து, சபதம் எடுத்தார்.
இந்த நிகழ்வின் போது சசிகலாவுக்கு பின்னால் நின்றிருந்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும், வளர்மதியும். இவர்களுக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார் தலைமை கழக நிர்வாகி மகாலிங்கம்.
இந்த மூன்று பேருக்கு மட்டுமே சசிகலா எடுத்த சபதங்கள் பற்றி முழுமையாக தெரியும் என்பதால் அவர்கள் எங்கு சென்றாலும், சசிகலா எடுத்த சபதம் குறித்தே கேட்கிறார்களாம்.
அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் கட்சிக்காரர்கள் மற்றும் பொது மக்கள் சசிகலா எடுத்த சபதம் குறித்து கேட்பதால் பல சமயங்களில் வளர்மதியும் , கோகுல இந்திராவும் தங்களது செல்போனை சுவிட் ஆஃப் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள், சபதம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறி வருவதால், அவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்க நினைக்கும் பொதுமக்கள் இப்படித்தானே சசிகலா சபதம் எடுத்தார் என சம்பந்தமில்லாமல் பலவற்றையும் கூறி வருகிறார்களாம்.
அவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு, ஆமாம் என்று கூறி அது மறுமுனையில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானாலோ, அல்லது கட்சி தலைமை பொறுப்பில் இருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு தெரிய வந்தாலோ கட்சியில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று அஞ்சி நடுங்குகிறார்களாம்.
இதனால் தற்போது எந்த அழைப்பு வந்தாலும், அவர்கள் பயத்தில் அதிருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
Comments