#ஓரளவுக்கு_தான்_பொறுமை ! சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறிய #ஓரளவுக்கு_தான்_பொறுமை என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இரண்டு பிரிவாக செயல்பட்டு வரும் அதிமுகவினர், ஆட்சி அமைக்க ஆளுநரின் அழைப்பிற்காக காத்து கிடக்கின்றனர் . சசிகலா தரப்பில் இருக்கும் ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஒவ்வொருவராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் பக்கம் சென்று சேர்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆளுநர் காலதாமதிப்பது கட்சி உடைய காரணமாக அமையும் என்று கூறினார். மேலும், எங்களால் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும் என்றும், பிறகு செய்ய வேண்டியதை செய்வோம் என்றும் குறிப்பிட்டார். அவர் கூறிய #ஓரளவுக்கு_தான்_பொறுமை என்ற வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
Comments