என்னை யாரும் தூக்க முடியாது..! முதல்வர் எடப்பாடிக்கு தினகரன் மறைமுக எச்சரிக்கை..!
- crazynewschannel
- Jun 1, 2017
- 1 min read

இன்னும் சரியா ஆட்சியே நடத்த தெரியவில்லை என்று தினகரன் புகழ்பாடும் புகழேந்தியிடம் தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்,புகழேந்தி ஆகிய இருவரும் தான் தினகரனின் தற்போதைய ஆதரவாளர்கள். அவர்களுக்கு இட்ட பணிகளை சரியாக செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக புகழேந்தி தினகரனின் வழக்கறிஞர்களை அடிக்கடி டில்லியில் சந்தித்து வழக்கு விபரங்கள் குறித்து கேட்பதுடன் தினகரனையும் சிறையில் சென்று பார்த்து வருகிறார். அப்படி பார்த்தபோது தினகரனிடம் புகழேந்தி கூறியது, நான்,நாஞ்சில் சம்பத் மற்றும் குண்டு கல்யாணம் ஆகியோர் எல்லா ஊர்களுக்கும் போய் நமது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறோம். சில இடங்களில் கூட்டம் போடுகிறோம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு என்றாராம்.
அதற்கு தினகரன், ஆமா..ஆமா..ஆட்சியே நம்மலுது தான். இவங்களுக்கு ஆட்சியை நடத்தவே தெரியலை. எப்படியும் நான் வெளியே வந்திடுவேன். அப்போது பார்த்துக்கலாம். நீங்க எவ்வளவு ஊர்களுக்கு போக முடியுமோ எல்லா ஊர்களுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள்.சிலர் வெளிப்படையா ஆதரவு தெரிவிக்க மாட்டாங்க. அவங்களை தனியா அழைச்சி பேசுங்க என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சசிலா, நான் சொல்றது தினகரன் கேட்டிருந்தா இந்த நிலை வந்திருக்காது என்று கவலை அடைந்துள்ளார். இந்த நிலையில் சிறைக்குள்ளிருந்தே அரசியல் பண்ண நினைக்கும் தினகரனின் செயல் அவர் அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றிவிட முடியாது என்பதை சொல்வது போலுள்ளது.
Comments