700 ஆண்டு பழமையான தேவாலயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை?
crazynewschannel
Feb 5, 2017
1 min read
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்பை போன்ற சிலை ஒன்று, இங்கிலாந்தில் உள்ள 700 ஆண்டுகால பழமையான தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் நாட்டிங்கம் ஷயர் பகுதியில் உள்ள சவுத்வெல் மின்ஸ்டர் சர்ச் என்ற 700 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் தாம் அதிபர் டிரம்பின் முகத்துடன் ஒத்துப்போகும் வகையில் உள்ள ஒரு முகம் கல்லில் செதுக்கப்பட்டு காட்சியளிக்கின்றது.இந்த சிலையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருடைய தலைமுடி ஸ்டைல் தான் அப்படியே இருக்கின்றதாம். இந்த சிலை தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றது.
Comments