டிரம்ப் வருகையால் 65% சதவீத மென்பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்? ; ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
![](https://static.wixstatic.com/media/d572ed_8ea8c55b520546d3bbc1169b69c4aa1b~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_8ea8c55b520546d3bbc1169b69c4aa1b~mv2.jpg)
இந்திய மென்பொருள் துறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியே இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மென்பொருள் பொறியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஏற்கனவே இந்தியாவில் 80 சதவீதம் பேர் பொறியியல் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அனேக மென்பொருள் பொறியாளர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சார்பில் தலைமை பண்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கேப்ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி (இந்தியா) ஸ்ரீனிவாஸ் காண்டுலா கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வேகமாக ஊடுருவி வருகின்றன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் 39 லட்சம் பேரில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் டிஜிட்டல் துறைக்கு தகுந்தவாறு பயிற்சி பெற்றுள்ளனர். பெரும்பாலானோருக்கு இதுகுறித்த விவரங்கள் எதுவும் போதவில்லை.
இதன் காரணமாகவே 65 சதவீத நடுநிலை மற்றும் சீனியர் அளவிலான பொறியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றால் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைத்து திறனும் பெற்றவர்களாக திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.
Comments