‘‘இப்படித்தான் ஆடை இருக்கணும்’’ பெண்களுக்கு உத்தரவு போட்ட ட்ரம்ப்...
அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் இன்று வரை பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது, வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஆண்கள் கழுத்தில் கட்டாயம் ‘டை’ அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பெண்களும் ஜீன்ஸ் அணிந்தால்கூட கண்ணியமாக இருக்கவேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து வெள்ளை மாளிகை பெண் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘‘நாங்கள் பெண்ணாக நடந்துகொள்கிறோம்.. நீங்கள் அதிபராக நடந்துகொள்ளுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி பேட்டியால் இவர் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வெள்ளை மாளிகையில் அதிகாரிகளிடையே சற்று சலசலப்பு நிலவி வருகிறது.
Comments