ரயிலில் வாட்ஸ் ஆப் மூலம் பெண்ணுக்கு பிரசவம்!
![](https://static.wixstatic.com/media/d572ed_eaa4007db698429f9759dd6977529927~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_eaa4007db698429f9759dd6977529927~mv2.jpg)
எக்ஸ்பிரஸ் ரயிலில், வாட்ஸ் ஆப் மூலம் டாக்டர்களின் ஆலோசனைப்படி பெண் பயணி ஒருவருக்கு மருத்துவ மாணவர் , பிரசவம் பார்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அகமதாபாத் – புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, அவர் யாராவது டாக்டர் இருந்தால் அப்பெண்ணிற்கு உதவி செய்யுங்கள் என்று அறிவித்தார்.
அப்போது, அந்த ரயிலில் பயணம் செய்த எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர் விபின் காத்சே, டாக்டர்களின் ஆலோசனைகளை வாட்சப்பில் பெற்று, தனக்கு தெரிந்த மருத்துவ முறைகள் மூலம் அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். அப்பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
விபின் காத்சே, இந்த நிகழ்வை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், பல்வேறு தரப்புகளிலிருந்து அவருக்கு பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
Comments