தாஜ்மஹாலைத் தகர்க்க ஐஎஸ் சதியா..? அதிர்ச்சி தகவல்..!
- crazynewschannel
- Mar 17, 2017
- 1 min read

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்ட விவரத்தை டெலெக்ராமில்(Telegram) வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வு குழு (SITE Intelligence Group) வெளியிட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள ஒரு நினைவிடத்தை தாக்கப்போவதாகக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளும் வேனும் உள்ளது. அதில் அந்த வேன், தாஜ்மஹாலை நோக்கி செல்வதுபோலவும் தாஜ்மஹாலுக்குள் வேனை இயக்கி தகர்க்க திட்டமிட்டுள்ளது போலவும் அந்த காட்சி அமைந்துள்ளது. அப்படியென்றால் வெடிகுண்டு பொருத்தப்பட்ட வேன் தாஜ்மஹாலுக்குள் புகுந்து இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளதாக சுட்டிக்காட்டும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
மேலும் புகைப்படத்தின் கீழ்ப்பகுதியில் புதிய இலக்கு (New Target) என எழுதப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பில் சேர்க்கும் நோக்கில், இந்தியாவில் பிரத்யேக ஐஎஸ் ஆள் சேர்ப்புப் பிரிவை உருவாக்க ஐஎஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கால்பதிக்க முயலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதன் முன்னோட்டமாகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பான ஐபி தெரிவித்துள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவில் தடம்பதிக்க விடாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Comments