‘டாப் 5 மதுபான உற்பத்தி’ யாருடையது? ஓர் அதிர்ச்சி தகவல்
![](https://static.wixstatic.com/media/d572ed_642f64e7f0ea41e697697c07fda31db3~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_642f64e7f0ea41e697697c07fda31db3~mv2.jpg)
தமிழகத்தில் அரசியல்வாதிகளின் மது உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் குடிமகன்களும் இருக்கும் வரை மது விற்பனையை தடை செய்ய முடியாது. ஏனென்றால் மது உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதே பெரும்பாலும் அரசியல்வாதிகளின் சொந்தங்களும் அவர்களும்தான்.
சரி அதை விடுங்க.. தமிழகத்தில் முதல் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளை யார் யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
மிடாஸ் கோல்டன் – ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தார்
எலைட் டிஸ்டிரில்லரீஸ் – முன்னாள் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன்
எம்பி குரூப் – முன்னாள் கேரள அமைச்சர் வயலார் ரவி உறவினர்கள்
கோல்டன் வாட் – திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உறவினர்கள்
எஸ்என்ஜே டிஸ்டிரில்லரீஸ் – திமுகவிற்கு நெருங்கமான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயமுருகன்
![](https://static.wixstatic.com/media/d572ed_42c1f82b289d4891b8ee791ede010117~mv2.jpg/v1/fill/w_540,h_540,al_c,q_80,enc_auto/d572ed_42c1f82b289d4891b8ee791ede010117~mv2.jpg)
இவ்வாறு இருக்கையில், இந்த மதுபான ஆலைகளை மூட எடப்பாடி தலைமையிலான அரசுக்கு தைரியம் உள்ளதா? என தமிழக மக்கள் தரப்பில் பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.
நடக்குமா என்பது நம்மில் தோன்றும் விடைக்காணா மனக்குமுறலின் மீதியே..?
Comentarios