அரியணை யாருக்கு? இன்று வெளியாகும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு! நடுக்கத்தில் சசிகலா அண்ட் கோ!?
![](https://static.wixstatic.com/media/d572ed_97299e6b3d8b4599a8cdb55ba67af513~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_97299e6b3d8b4599a8cdb55ba67af513~mv2.jpg)
சசிகலா மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வெளியிடுகிறது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி வி.கே. சசிகலா, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் வி.கே.சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி ஆகிய நான்கு பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததால், அவரது பெயர் மட்டும் நீக்கப்பட்டது . முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின், இது தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27, 2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து நால்வரையும் விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இந்த தீர்ப்பை பொறுத்து தான் தமிழக முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். தமிழக முதல்வர் அரியனைக்கு சசிகலா மற்றும் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments