ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உலகப் பிரசித்திபெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு உலகம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்க நகைகள், ரொக்கம் மற்றும் இதர நன்கொடைகள் நாளுக்குநாள் காணிக்கையாக மக்கள் குவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலமாக பிரிய காரணமானவரும் போராட்டத்தின் முக்கியஸ்தருமான தற்போதைய அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ், திருப்பதிக்கு வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.
இந்த காணிக்கையில், சாலிகிராம ஹாரம் மற்றும் வைர நகைகளும் அடங்கும். இதன் மதிப்பு ரூ.5.6 கோடியாகும். இதை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தார் சந்திரசேகர ராவ். உடன் அவரது குடும்பத்தார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உடனிருந்தனர்.
Comments