புகுஷிமா அணுஉலையில் அபாய கதிர்வீச்சு !!!
![](https://static.wixstatic.com/media/d572ed_2e79cf2ca82d45aeba75769bc30c1765~mv2.jpg/v1/fill/w_636,h_433,al_c,q_80,enc_auto/d572ed_2e79cf2ca82d45aeba75769bc30c1765~mv2.jpg)
கடந்த 2011 மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் புகுஷிமா அணு உலை கடுமையாக சேதமடைந்தது. அங்கிருந்த அணு உலை கள் வெடித்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணுஉலை ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் 2-வது அணுஉலையில் அபாய அளவைத் தாண்டி கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. அங்கு இப்போது யார் சென்றாலும் உடனடியாக மரணம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.
புகுஷிமா அணுஉலை பகுதி யில் மனிதர்கள் யாரும் இல்லை. ரோபோக்கள் மட்டுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலை மையை அறிந்து கொள்ள ரோபோ கேமராக்கள் பயன் படுத்தப்படுகின்றன. கதிர்வீச்சு பாதிப்பால் அந்த கேமராக்களும் 2 மணி நேரத்தில் செயலிழக்கக் கூடும் என்பதால் அவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாதுகாப் பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டு வருகின்றன.
புகுஷிமா அணுஉலையை பாதுகாப்பாக மூடுவது தொடர் பாக பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ரூ.6,80,050 கோடி செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
Comments