எஸ் 3 ரிலீஸ் அன்றே திருட்டுதனமாக வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்! !
![](https://static.wixstatic.com/media/d572ed_572e6d26029e4380868388d7a36752f3~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_572e6d26029e4380868388d7a36752f3~mv2.jpg)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எமன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஞானவேல் ராஜா, புதுப்படங்களை தொடர்ந்து இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றிவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை கடுமையான வாத்தைகளால் தாக்கி பேசியிருக்கிறார்.
போகன் படம் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. ஆனால் வெளிவந்த முன்பே ஃபேஸ்புக்கில் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 9ம் தேதி சூர்யா நடிப்பில் உருவான சி-3 படம் உருவாகவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கே லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் பதிவு வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஃபைனான்ஸ் பிரச்சனை ஒருபுறம் இருக்க, நான் 11 மணிக்கு லைவ் போடுவேன் என்று இவர்கள் உறுதியளிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இதனை தமிழ் திரையுலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் உன்னை 6 மாதத்திற்குள் பிடித்து உள்ளே போடுவோம். அதனை நாங்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வோம் என்றும் கூறியிருக்கிறார்.
அதற்குள் தமிழ் ராக்கர்ஸ் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்கள். நல்லா பேசுனீங்க ஞானவேல் ராஜா சார். உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க.. வரும் 9ம் தேதி உங்களுடைய நாள் கிடையாது. அது எங்களுடைய நாள் என்று பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் ராக்கர்ஸின் இந்த அதிரடி அறிவிப்பு சூர்யாவை அதிர்ச்சிடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சில நிமிடங்களில் அந்த டுவிட்டர் பக்கம் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது..
Comments