சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்..!
- crazynewschannel
- Mar 19, 2017
- 1 min read

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துக்கள் நிகழ்வதாக தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல்சோய் கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல்சோய், கேரளா, மகாராஷ்ரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சென்னை வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விமான விபத்துக்கள் கவனிக்கப்படும் அளவுக்கு சாலை விபத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. சாலை விபத்துக்களில் தினமும் 50 பேர் உயிரிழக்கின்றனர்.
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நிகழும் நாடு இந்தியாவாகவும் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்கள் நிகழும் மாநிலம் தமிழ்நாடாகவும் இருப்பது மனதிற்கு வேதனையளிக்கிறது.
நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதும் தான் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணங்களாக அமைகின்றன. சுய கட்டுப்பாட்டுடன் வாகனங்களை ஓட்டினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை தமிழக போக்குவரத்துத்துறை முறையாக கண்காணிக்க வேண்டும். சட்டங்களை முறையாக செயல்படுத்தினாலே விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இவ்வாறு கமல்சோய் பேசினார்.
Comments