உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு எது? சுவாரஸ்யமான சில விஷயங்கள்
![](https://static.wixstatic.com/media/d572ed_d6cabf5445e74fa9a14521cb0671f72f~mv2.jpg/v1/fill/w_852,h_480,al_c,q_85,enc_auto/d572ed_d6cabf5445e74fa9a14521cb0671f72f~mv2.jpg)
உலகில் இருக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வது, ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம். சிலர் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய நேரங்களில் உலகை பற்றிய தகவல்களை அறிய முயற்சிக்கிறார்கள். சிலர் வாழ்க்கையை உலகபைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்துகிறார்கள். உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுமே ஒரு சுவாரஸ்மான விஷயங்களை கொண்டதாகத்தான் இருக்கின்றன. அதை அறிந்து கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான தகவல்களைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து. கடைசியாக உதிக்கும் இடம் அமெரிக்கா நாட்டில் உள்ள சமோவா தீவுகள். ஒபாமா தனது 55வது வயதில் அதிபர் பதவியில் இருந்து விடை பெறுகிறார். ஆனால், டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் தனது 30 வயதிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் இன்டெக்ஸ் ஸ்பெயின் நிறுவனத்தை தனது 50ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது.
Comments