பன்னீர் செல்வத்தை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரணை தேவை.. ஸ்டாலின் வேண்டுகோள்..
சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. தன்னை மிரட்டிதான் ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று பன்னீர் செல்வம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
பன்னீர் செல்வத்தின் இத்தகைய பேச்சு சசிகலா தரப்பை அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திமுக உள்பட எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. ஓபிஎஸ் மிரட்டப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, என்னை பார்த்து சிரித்தது குற்றமா. பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூடத்தான் என்னை பார்த்து சிரிப்பார். மேலும் ஒரு முதல்வரிடம் மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
Comments