38 எம்எல்ஏக்கள் ரெடி; திமுக ஆட்சியை கைப்பற்ற மத்திய அரசு ‘கிரீன் சிக்னல்’?
![](https://static.wixstatic.com/media/d572ed_8a6bba09c4b74249836a0e80277a2d53~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_8a6bba09c4b74249836a0e80277a2d53~mv2.jpg)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழக முதல்வராக நிதியமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இவர் எளிமையாகவும், மக்கள் விரும்பும் வகையிலும் செயல்பட்டு வந்தார். தொடர்ந்து அவரே முதல்வராக இருப்பார் என்ற நிலை மக்களும் தொண்டர்களும் இருந்தனர்.
இந்நிலையில், திடீரென எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி சட்டமன்ற கட்சித் தலைவராக அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலேயே பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், வேறுவழியின்றிதான் அவர்கள் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானதும், அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம் திமுக தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், 38 பேர் வெளியிலிருந்து திமுகவுக்கு ஆதரவளிப்பதாக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைமையின் திட்டப்படி, மாவட்டந்தோறும் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் வேலையில் முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், தென் மாவட்டங்களுக்கு சாத்தூர் ராமச்சந்திரன், வட மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, மேற்கு மாவட்டங்களுக்கு பொங்கலூர் பழனிச்சாமி, முத்துச்சாமி, என்.கே.கே.பெரியசாமி. என்.கே.கே.பி.ராஜா, சென்னை மாவட்டங்களுக்கு மா.சுப்பிரமணியன், நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் முழு ஆதரவு தேவை என்பதை உணர்ந்த திமுக, இதற்காக மும்பையைச் சேர்ந்த பாஜ தலைவர் ஒருவரிடம் மத்திய அரசிடம் கிரீன் சிக்னல் பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் ரகசிய பேச்சு நடத்தி முடித்துள்ளாராம்.
எனவே, சசிகலா முதல்வராகும் பட்சத்தில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெருபான்மையை நிரூபிக்கவும் தயாராகி வருவதாகவும கூறப்படுகிறது.
திமுகவின் இத்திட்டம் வெற்றியடைந்தால், மத்திய அரசு ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தனிப்பெருபான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் என்ற நிலையில், தற்போது திமுகவிடம் 89 எம்எல்ஏக்கள், கூட்டணிக்கட்சியிடம் 9 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
திமுக ஆட்சியை அமைக்க இன்னும் 20 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், எளிதாகப் பெற்றுவிடலாம் என்று திமுக களத்தில் இறங்கியுள்ளது. இந்த ரகசியத் திட்டத்தால் சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளதாக தெரிகிறது.
Kommentare