900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை – எங்கே தெரியுமா?
![](https://static.wixstatic.com/media/d572ed_03f26424da85484d946963d161b71ad6~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_03f26424da85484d946963d161b71ad6~mv2.jpg)
ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகின்றது. இந்த இடத்தில் தான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் சமாதி நிலை எய்தியாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டம், ஷத்ருஞ்ஜய் மலைதான் இந்த பெருமைக்குரிய தலமாகும். இங்குள்ள மலை மேல் மட்டும் 900 கோயில்கள் இருக்கின்றது.
மார்பிளினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை மற்றும் மிகவும் சக்தி படைத்ததாக கூறப்படுகின்றது. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது 220 அடி உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடவுளர்கள் அனைவரும் உறைய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
இரவில் அனைத்துக் கடவுளர்களும் இங்கு உறங்குவதாக ஐதீகம் உள்ளது. இதனால் கோயில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மோக்ஷம் வேண்டுவோரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பவும் இந்த கோயிலை ஒருமுறையாவது பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று ஜைன புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆதிநாத், குமர்பால், விமல்ஷா, சம்ப்ரதிராஜா, சௌமுக் ஆகியவை இங்குள்ள ஜைன மதக் கோயில்களில் சிலவாகும்.
Comments