மாண்புகுறித்து பேசும் சபாநாயகர் மாண்புடன் செயல்பட்டாரா? நடுநிலையார்கள் கேள்வி?
![](https://static.wixstatic.com/media/d572ed_dabebf824b834534a50a5b3305790345~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_dabebf824b834534a50a5b3305790345~mv2.jpg)
நேற்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சபை மரபுகள் வரலாறு காணாத அளவில் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகர் வருத்தமுடன் இறுதியில் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் தான் சார்ந்த சமூகத்தின் பெயரை கூறி, தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் மாண்புக்கு அது உகந்ததல்ல. சபையில் அவரை சபாநாயகராக மட்டுமே பார்த்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இங்கு சபையின் நாகராக மட்டுமே அவர் தன்னை உருவகப்படுத்த வேண்டும்.மாறாக அவர் தான் சார்ந்த சமூகம் குறித்து பேச வேண்டியது தேவையற்றது. முன்னாள் முதலமைச்சர் கொடுத்த உயர்வை கூறும் இடம் அல்ல பேரவை. நன்றிக்கடன் பேசுவதற்கு வேறு இடங்கள் உள்ளன.
சபாநாயகர் நடுநிலையாக மட்டுமே செயல்பட வேண்டும்.
அவர் கட்சி சாராமல் துலாகோல் போல செயல்பட வேண்டும். ஆனால் சபாநாயகர் அப்பட்டமாக அதிமுகவிற்கு சாதகமாக செயல்பட்டு வருவது இன்று நேற்றல்ல அவர் சபாநாயகராக பதவியேற்ற காலம் தெமாட்டே நாம் பார்த்து வருகிறோம்.
அவ்வாறு கட்சி சார்ந்து செயல்பட்டு சபாநாயகரின் மாண்பை காப்பாற்றாத அவர் பேரவையின் மாண்பு குறித்து கவலைகொற்வதில் அர்த்தமில்லை என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
Comments