சோனி Xperia X கடந்த ஆண்டு ரூ.48,990 -க்கு வெளியானது. விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்டதையடுத்து சில மாதங்களிலேயே 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு 38,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சந்தையில் விற்பனையை மேலும் அதிகரிக்க, தற்போது அதன் விலை தடாலடியாக 14,000 ரூபாய் குறைக்கப்பட்டு 24.990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் வர்த்தக இணையதளமான ஃப்ளிப்கார்ட் டில் குறைந்த காலத்துக்கு மட்டும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Comments