சோமாலியா சந்தைப் பகுதியில் குண்டுவெடிப்பு: அப்பாவி பொதுமக்கள் 39 பேர் உடல்சிதறி பலியான பரிதாபம்...
- crazynewschannel
- Feb 21, 2017
- 1 min read

சோமாலியா நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சோமாலியா நாட்டின் தலைநகரான மொகாதிஷு நகரில் உள்ள மார்க்கெட்டில் வழக்கம் போல் மக்கள் தங்களின் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது அப்போது அங்கு ஒரு நபர் தனத காரை நிறுத்தினார். நிறுத்தப்பட்ட சற்றுநேரத்தில் அந்த கார் திடீர் என வெடித்து சிதறியது. இதில் சந்தையில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 39 பேர் பரிதாபமாக பலியாயினர்.
34 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரழந்தனர். 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரழந்தனர்.
படுகாயமடைந்த 52 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
コメント