ஐயா, எங்களை மன்னித்துவிடுங்கள : நெகிழ வைத்த இளைஞர்கள்! சிங்கம்டா!
![](https://static.wixstatic.com/media/d572ed_cbafb4fa69fc43bc8611f4080415bbc0~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_cbafb4fa69fc43bc8611f4080415bbc0~mv2.jpg)
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று துணிச்சலாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் இல்லை, தமிழகத்தில் சமீபத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளின் வெறுப்பால் மாணவர்களும் இளைஞர்களும் திரண்டுள்ளதாக கூறப்பட்டது. தமிழகத்திற்கு இழுக்கு நேர்ந்தால், எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
ஏன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சசிகலா தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும்பட்சத்தில் தெருவுக்கும், மெரினாவுக்கும் வந்து மாணவர்கள் போராட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அப்போது, பன்னீர் செல்வத்தை, ”மிக்சர் பன்னீர் செல்வம்” என்று கிண்டலடித்து பேசி வந்தனர். வலைத்தளங்களில் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்தனர்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த அவமானங்களை நேற்று மெரினாவில் பன்னீர் செல்வம் கொட்டி தீர்த்தார். இதையடுத்து, பன்னீர் செல்வத்தை மிக்சர் பன்னீர் செல்வம் என்று கூறியதற்கு, மன்னிப்பு கோரி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது பதிவுகளை இட்டு வருகின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வத்தை கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்டிருக்கும் இளைஞர்கள் இந்த செயல் நெகிழ வைப்பதாக இருக்கிறது.
Comments