மாணவர்களுக்கு தேர்வுக்கு இடையே ஸ்நாக்ஸ், சி.பி.எஸ்.இ அறிவிப்பு...
![](https://static.wixstatic.com/media/d572ed_9644149689ec42caaa94a02b48275b40~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_9644149689ec42caaa94a02b48275b40~mv2.jpg)
சி.பி.எஸ்.இ ஆண்டுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஆண்டுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு இடையில் ஸ்நாக்ஸ் உட்கொள்ள சி.பி.எஸ்.இ. அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,டைப்-1 டயபெடிஸ் எனும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமமாக வைக்க, தேர்வுக்கு இடையில் ஸ்நாக்ஸ் உட்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இனிப்பு மாத்திரைகள், சாக்லேட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தேர்வின் போது எடுத்துச்செல்லலாம்.
இந்தப் புதிய நடைமுறையை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெற, நீரிழிவு மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்று, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kommentare