ஆசியாவின் சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!
![](https://static.wixstatic.com/media/d572ed_92175652a78b499f900701c1cb1b6b97~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_92175652a78b499f900701c1cb1b6b97~mv2.jpg)
ஆசியாவின் சிறந்த நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது. உலகளவில் சிங்கப்பூர் 25வது இடத்தை பிடித்துள்ளது.
மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிடும்.
பொருளாதார வலிமை, அரசியல்தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, திடமான உள்கட்டமைப்பு, கல்வி, கலாச்சாரம், உணவு,குற்றம், போக்குவரத்து, சிறந்த பொழுதுபோக்கு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சுமார் 231 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரம், சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக வியன்னா இந்த இடத்தை தக்கவைத்துள்ளது.
இதனையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்து முதல் 5 இடங்களைப் கைபற்றியுள்ளது. லண்டன், பாரிஸ், டோக்கியோ மற்றும் நியூயார்க் போன்ற பிரபலமான நகரங்கள் முதல் 30 இடங்களில் கூட தேர்வாகவில்லை.
ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகளவில் 25வது இடத்தை பிடித்துள்ளது. வாழ்வதற்கு மோசமான சூழல் உள்ள இடமாக பாக்தாத் நகரம் தேர்வாகியுள்ளது. இதில் இந்திய நகரங்கள் ஒன்று கூட தேர்வாகவில்லை
Comentários