“நான் படத்தை ரிலீஸ் பண்றதா, வேண்டாமா?”-சூர்யா !!!
![](https://static.wixstatic.com/media/d572ed_8c560ab8c3fc48e4ba96afede302efe9~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_8c560ab8c3fc48e4ba96afede302efe9~mv2.jpg)
சிங்கம் 3 படம் நாளை ரிலீஸ் ஆக போகிறது.இது வரை நாட்டில் நிலவி வந்துள்ள அசாராதண சூழ்நிலையாக நோட்டு பிரச்சனை, வார்தா, ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம் என்று நான்கு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை எப்படியாவது ரிலீஸ் ஆகி 200 கோடி வரை வசூல் செய்யவேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள் படக்குழு.
ஆனால், தமிழ் ராக்கர்ஸ் படம் ரிலீஸ் ஆகும்போதே லைவ்வில் சிங்கம்3 யை ஒளிபரப்புவோம் என்று சவால் விட்டது. அந்த இணைய தளம் உட்பட 173 இணையத்தளங்களை முடக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஏற்கனவே போலீஸ் கதை என்பதால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று இரவு காபந்து முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ். அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் முழுக்க முழுக்க அரசியலின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், நாளை படம் ரிலீஸ் ஆனால், என்ன நிலை வருமோ என்று சூர்யா பயந்து போய் கதறிக்கொண்டு உள்ளாராம்.
Comments