நள்ளிரவில், சிம்புவை தாக்க வந்த அதிமுக விஐபி அனுப்பிய குண்டர்கள் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_92cfc0d2e4174a7ea120b6e89ba6c9df~mv2.jpg/v1/fill/w_620,h_351,al_c,q_80,enc_auto/d572ed_92cfc0d2e4174a7ea120b6e89ba6c9df~mv2.jpg)
சிம்புவுக்கென்ன ராசியோ தெரியலை. அவர் நடிச்ச படங்கள் வெளிய வருவதற்குள் தயாரிப்பாளர் தலை கீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டி இருக்கு. அவரு பக்கம் பார்த்தா, நடிச்ச படத்துக்கு சம்பளம் வாங்கறதுக்குள்ள, நாக்கு தள்ளிடுது சிம்புவுக்கு.
கடைசி செட்யூலில் காசை வச்சாத்தான் ஷூட்டிங் கிளம்புவார். 8 கோடி வரை சம்பளம் வாங்கும் சிம்புவிடம், அப்புறம் இப்புறம்ன்னா, ஷூட்டிங்குக்கு லேட்டா வருவார். சில சமயம் வரவே மாட்டார். இதெல்லாம் சம்பளம் கைக்கு வரலைன்னா மட்டும்தான், வந்துட்டு, தன் போர்ஷனை சரியாய் முடிச்சி கொடுத்திடுவார்.
இப்போ சிம்பு நடிக்கிறாரே, அந்த ட்ரிபிள் ஏ-‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன். அந்த படத்தின் தயரிப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன். இவர் இப்போ அதிமுக.
சிம்பு, சம்பள பாக்கியினால் இந்த படத்துக்கு ஷூட்டிங் வரலயாம்.
அதை பத்தி பேசியபோது, மைக்கேலுக்கும், சிம்புக்கு போனிலேயே செம சண்டையாம். சிம்பு கோபத்தில் எதோ பேசிட்டாராம்.
அதனால் கடுப்பான மைக்கேல், சிலரை அனுப்பி, சிம்பு வீட்டில் கலாட்டா செய்ய சொல்ல, சிம்பு கத்த, அவருக்கு துணையா டி.ராஜேந்தர் வந்து களத்தில் இறங்க, நள்ளிரவில் ஏரியாவே அல்லோகல்லமானதாம்.
தன்னையும் சிம்புவையும் தாக்க வந்ததாக டி.ஆர்,.மைக்கேல் ராயப்பன் மீது போலீஸ் புகார் தந்துள்ளார்களாம்.
ความคิดเห็น