வாய மூடு, நிருபர்கள் சந்திப்பில் சசி குண்டர்கள் அடாவடி! பயத்துடன் வெளியே வந்த நிருபர்கள்...
கூவத்துரர் தீவு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலா,
தன்னிடம் அனைத்து எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள் என்று காண்பிக்க ஹோட்டல் உள்ளே நிருபர்களை கூப்பிட்டு பேட்டியளித்தார்.
அங்கு எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் அமர்ந்து பேட்டி கொடுத்த சசிகலா, நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் அனைவரும் இங்கே சுதந்திரமாக இருக்கின்றனர் என்று கூறினார்.
அப்போது குறிக்கிட்டு கேள்வி கேட்ட நிருபரை, ஆவேசமாக, சசியின் அடியால் ஒருவர் வாயமூடு என்று கூறியது நிருபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஒரு கேள்வி கேட்ட நிருபரிடம் மிரட்டும் தொணியில் நீங்க எந்த பத்திரிக்கை என சசி கேட்டார்.
இதனால் பயந்து போன நிருபர்கள் அதிகமாக கேள்வி கேட்காமல் ஒரு சில கேள்விகளுடன் நிறுத்தி கொண்டனர்.
Commentaires