ராகவா லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த லஞ்சம் கொடுத்தார் – சீறும் சீமான்
![](https://static.wixstatic.com/media/d572ed_0bf5576fef3744479b308cd7b231f912~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_0bf5576fef3744479b308cd7b231f912~mv2.jpg)
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாணவர்கள் நடத்திய அறவழி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவசர சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
மாணவர்கள் போராட்டத்தில் தமிழ் உணர்வாளன் என்ற முறையில் தானும் கலந்து கொள்வதாக நடிகர் லாரன்ஸ் போராட்டத்தில் பங்கேற்றார். மேலும் மணவர்களின் போராட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் கூட செலவு செய்ய தயார் என்று கூறிய அவர், போராட்டக்காரர்களுக்கு உணவு,தண்ணீர், பெட்ஷீட், மொபைல் டாய்லெட் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், நடிகர் லாரன்ஸ் லஞ்சம் கொடுத்து போராட்டம் நடத்தினார் என்று விமர்சனம் செய்தார். ஹிப் ஹாப் ஆதியும், லாரன்ஸையும் விமர்சனம் செய்த சீமான், லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்கிறாரே அதை யாரிடம் கொடுத்தார் என்று சொல்ல சொல்லுங்கள் என்று வரிசையாக பல கேள்விகளை எழுப்பினார். சீமானின் விமர்சனம் குறித்து இதுவரை லாரன்ஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை.
Comentarios