சவுதியில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளி.. மீட்க கோரிக்கை!
சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற திண்டுக்கல் மாவட்டம் சித்தயங்கோட்டையைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் தன்னுடைய விசா காலம் முடிவடைந்தும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வேலை செய்யும் நிறுவனம் தம்மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும் வாட்ஸ் அப் மூலமாக அஷ்ரப் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அஷ்ரப்பின் பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்திய தூதரகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களிடம் சேர்க்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments