கோடிக்கணக்கில் பணம் வாங்கிய சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் – வருமானவரித்துறை கண்காணிப்பு?
![](https://static.wixstatic.com/media/d572ed_0112bd416de3423997aab3d126da4740~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_0112bd416de3423997aab3d126da4740~mv2.jpg)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 129 பேரை வருமானவரித்துறையினர் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பன்னீர்செல்வம் போராடி வருகிறார். இதனால் கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிரமுகர்கள், ஆகியோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவின் 5 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமியும் தற்போது ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்துள்ள சசிகலா அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறையினர் கண்காணிக்க துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments