சாலை மார்க்கமாக பெங்களூர் செல்லும் சசிகலா – நீதிமன்றத்தில் சரண்!
- crazynewschannel
- Feb 15, 2017
- 1 min read

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள சசிகலா, சென்னை போயஸ் கார்டனில் இருந்து சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் குற்றவாளிகள் என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் நேற்று மாலைக்குள்,பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்,பெங்களூரு நீதிமன்றத்திற்கு வர தாமதமானதால், நாளை காலை சசிகலா நீதிமன்றத்தில் சரணடைவார் என கூறப்பட்டது. ஆனால் நேற்றிரவு முழுவதும் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் சசிகலா தங்கியிருந்தார்.
இந்த நிலையில் சசிகலா இன்று விமானம் மூலமாக பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் சரணடைவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அவர் சாலை மார்க்கமாக, பெங்களூரு செல்கிறார்.
மேலும், நீதிமன்றத்தில் சரணடைய, நான்கு வார கால அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் ,உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments