தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த திட்டம் – ஆங்காங்கே குண்டர்களை இறக்கியது சசி கும்பல்!!
![](https://static.wixstatic.com/media/d572ed_bd74fb61b2c24c3c86cae9ef856bb93a~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_bd74fb61b2c24c3c86cae9ef856bb93a~mv2.jpg)
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே இருக்கிறது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க கட்சி எம்.எல்.ஏக்களை தவிர வேறு யாரும் விரும்பவில்லை.
பன்னீர் செல்வம் தான் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதே போல், அவர் தான் அம்மாவின் உண்மை விசுவாசி என்று கூறி அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பன்னீருடன் கை கோர்த்தனர்
சூழல் தனக்கு எதிராக மாறுவதை நன்கு புரிந்துக்கொண்ட சசிகலா, தன்னை தவிர வேறு யாரும் அதிமுகவை ஆளக்கூடாது என்ற பேராசையில் பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது, அரசியல் களம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மாறி வரும் சூழலில், அதை எவ்வாறாவது தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஒருவேளை ஆளுநர், முதல்வர் பன்னீர்செல்வத்தை அழைத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுவதற்காக கலவரத்தை உண்டாக்க முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக, தனது சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்து பல ரவுடிகளை இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அதிமுக கஜானாவில் உள்ள பணத்தில் தான் செலவுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், எந்நேரமும் கலவரம் வெடிக்க கூடும் என்பதால், மக்கள் உஷாராக இருக்க வெண்டும்.
Comments