சசிகலா முதல்வராக ஆதரவா, எதிர்ப்பா? கருத்துக்கணிப்பு Live
- crazynewschannel
- Feb 5, 2017
- 1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்குப்பிறகு, கட்சியின் பொறுப்பும், ஆட்சியின் பொறுப்பும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என தம்பிதுரை அப்போதே கோரிக்கை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு கட்சிகளிடையே சசிகலா மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களிடையேயும் பல்வேறு குமுறல்கள் இருந்துவரும் நிலையில், தற்போது பேஸ்புக் தளம் ஒன்றில் மக்களுடைய கருத்துக்களை கேட்க லைவ் கருத்துகணிப்பு பதிவு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில், சசிகலா முதல்வராக ஆதரவா? எதிர்ப்பா? என்று பதியும் முறையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் இதுவரை எதிர்ப்பே அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் கருத்துக்கணிப்பில் பங்குபெற:
https://www.facebook.com/NallaPathivugalaiPagirvom
Comentários