ரவுடிகளை இறக்கிய மன்னார்குடி மாஃபியா – பன்னீருக்கு குறியா?
![](https://static.wixstatic.com/media/d572ed_40c4a1d72382446ba4e00e0a0b782d74~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_40c4a1d72382446ba4e00e0a0b782d74~mv2.jpg)
என்ன பிரச்சனை நடந்தாலும் சமாளிக்கும் வகையில் சுமார் 250 அடியாட்கள் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுவதால், மக்கள் ஒவ்வொரு நிகழ்வையும், நகர்வையும் உற்று நோக்க தொடங்கியுள்ளனர். சசிகலா மற்றும் பன்னீர் செல்வத்திற்கு இடையேயான யுத்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா நடராஜனின் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்து சுமார் 250 அடியாட்கள் சென்னை வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டார் ஹோட்டல்களிலும், வீடுகளிலும் ரவுடிகளை தங்கவைத்து அதிமுகவினர் சாப்பாடு மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கின்றனராம். இவர்கள் இல்லாமல் முக்கிய குடும்பத்தை சேர்ந்த 1000 பேர் சென்னை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சென்னை வரவழைக்கப்பட்ட உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், ஏதாவது சிக்கல் என்றால் உள்ளூர் ஆட்களை நம்ப முடியாது என்பதால், சொந்த ஊரில் இருந்து ஆட்களை வரவழைத்திருப்பதாக பட்சிகள் தகவல் தெரிவித்தன.
சென்னையில் குவிக்கப்பட்டுவரும் அடியாட்களால், பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தலா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kommentare