உச்ச நீதிமன்ற தீர்ப்பு சசிக்கு பாதகமாக வந்தால் கூவத்தூரில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்: 3 மாவட்ட எஸ்.
![](https://static.wixstatic.com/media/d572ed_9cf6202bd83941848b206879ad4131ce~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_9cf6202bd83941848b206879ad4131ce~mv2.jpg)
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு பாதகமாக வந்தால் கூவத்தூரில் திட்டமிட்டு வன்முறையை கையாள்வதற்காக 200 ரவுடிகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு கர்நாடகா தனி நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் 2 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது இவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இன்று 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று கனவோடு கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தங்கியுள்ளார். அவருக்கு தீர்ப்பு பாதகமாக வந்தால் திட்டமிட்டு கூவத்தூரில் வன்முறையை ஏற்படுத்தி அங்கிருந்து தப்பித்துபோக திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 200 ரவுடிகளை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று பள்ளி செல்வதை தவிர்க்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் ஆயுதபடை போலீசார் என 1000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments