நாதியத்து போன சசிகலா!? பெங்களூரு சிறை வளாகம் வெறிச்சோடியது, அன்றும் இன்றும் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_bc4a1bc8d151445680e754794241fba7~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_bc4a1bc8d151445680e754794241fba7~mv2.jpg)
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று பிப்.,15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசி.,மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டனர்.
இதே வழக்கில் கடந்த 2014ல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது சிறை வளாகமே மிகுந்த பரபரப்புக்குள்ளானது. சிறைவளாகம் முன்பு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது நிலவிய பரபரப்பான சூழ்நிலையை சமாளிக்க கர்நாடகா அரசு நூற்றுக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியது.
ஜெயலலிதா சிறையில் இருந்த போது இருந்த நிலை மாறி, தற்போது சசிகலா சிறையில் வைக்கப்பட்ட பிறகு சிறைவளாகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு தான் மக்கள் உள்ளனர். அ.தி.மு.,க., வைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் சசியை தேடி வரவில்லை.
சசி சிறையில் அடைக்கப்பட்டதும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்று எண்ணிய கர்நாடகா போலீசார் பாதுகாப்பை அதிகபடுத்தியிருந்தனர். ஆனால், தற்போது சிறை பக்கம் மக்கள் யாரும் வராமல் இருந்தாலும் போலீசார் பாதுகாப்பு மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
留言