ஒரு வாரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு.. சிறை செல்கிறார் சசிகலா?
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி சசிகலாவுக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டது.
முதல்வர் பன்னீர் செல்வமும் தனது பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார். எனவே இன்னும் ஓரிரு நாளில் சசிகலா முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகி விட்டது.
சசிகலா முதல்வராக பதவி ஏற்க தமிழக மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே போல மத்திய அரசும் சசி முதல்வராவதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தீர்ப்பை வழங்க உள்ளார்.
இந்த தீர்ப்பில் சசிகலா சிறை செல்வது தயார் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Bình luận