நாட்டாமை தீர்ப்பை மாத்திட்டியே?
- crazynewschannel
- Feb 12, 2017
- 1 min read

சரத்குமார் சசிகலாவுக்காக, பன்னீர் செல்வத்தின் ராஜினாமா பத்தி பதிவிட்டு இரு தினங்கள் கூட ஆகவில்லை. ஆனால், இன்று ஓ. பன்னீர் செல்வத்துக்கு தன் ஆதரவை தெரிவித்து விட்டார்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், சசிகலாவுக்கு தன் முழுமையான ஆதரவை வழங்கினார்.
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதிலிருந்து தீவிர அரசியலை விட்டு கொஞ்சமாய் ஒதுங்கி இருந்தார் சரத்குமார்.
ஜெயலலிதா மறைந்த பின், சசிகலா அதிமுக கட்சியை வழிநடத்தவேண்டும் என்று சொல்லியிருந்தவர் சரத்குமார். தன் மனைவி ராதிகாவுடன் சென்று சசிகலாவுடன் உரையாடினார். அவர் பொதுச்செயலாளர் ஆனதற்கு வாழ்த்து கடிதமும் அனுப்பினார்.

அதன்பின் தன் முழு ஆதரவை வழங்கி வந்த சரத்குமாருக்கு நேற்று நடந்த பிரச்சனை அதிர்ச்சி அளித்துள்ளது போலும். ஓபிஎஸ், தன் ராஜினாமாவை கட்டாயப்படுத்தி வாங்கியதாக சொல்லுவது வருத்தமளிக்கிறது என்று தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Comments