ஆர்.கே.நகரில் முன்னுதாரண முடிவை எடுக்குமா தேர்தல் ஆணையம்?
பெரும் சவாலாக மாறியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாட்டுக்கே முன்னு தாரணமான அதிரடி முடிவை தேர் தல் ஆணையம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
நாடே உற்று நோக்கிய உத்தரப் பிரதேச தேர்தலை எவ்வித பிரச்சி னையுமின்றி தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துவிட்டது. அதன்பின், தற்போது பல மாநிலங்களில் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் ஒன்று ஆர்.கே.நகர். விஐபி தொகுதி யான இதில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணை யம் தன் முழு பலத்தையும் பயன் படுத்தி வருகிறது. இருப்பினும் தேர்தலை நடத்துவதில் சிக்கல் களை சந்தித்து வருகிறது.
கடந்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது வாக் காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதால், அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்டது. அதேபோல், இந்த தேர்தலிலும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழும்பி யுள்ளன. ஒரு கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான சர்ச்சை பெரிய அளவில் வெடித்து, தற்போது வருமான வரித்துறை சோதனை அளவுக்கு சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மற்ற கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதேநேரம், தேர்தலை நிறுத்து வதை கவுரவ குறைச்சலாக கருதும் தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகரில் அதிகாரிகளை மாற்றுவதுடன், கூடு தலாக மத்திய அரசு அதிகாரிகளை பார்வையாளர்கள், சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி என இறக்குமதி செய்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் புகார்கள் குறையவில்லை. எனவே, பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையி லும், வேட்பாளர்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரணமான நடவடிக்கையை தேர்தல் ஆணை யம் எடுக்கும் என பரவலாக பேசப் படுகிறது.
ஆர்.கே.நகரை பொறுத்தவரை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால், வரும் ஜூன் 1-ம் தேதிக்குள் அதை நடத்தி முடித்து, ஜூன் 4-ம் தேதிக்குள் புதியவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கு பின் தேர்தலை நடத்த வேண்டிவந்தால், சட்டத்திருத்தத்தை கொண்டு வரவேண்டும். அந்த நிலைக்கு செல்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்றே தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, தேர்தலை ரத்து செய்வதை விட, வேட்பாளர் தகுதி நீக்கம் அல்லது வேறு ஏதேனும் முடிவை சட்ட ரீதியிலான ஆலோசனை பெற்று தேர்தல் ஆணையம் எடுக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் கேட்ட போது,‘‘ தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, தேர் தலை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் உள்ளது. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய, அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண் டும். இதில் சாட்சிகள் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தகுதிநீக்கம் செய்ய முடியும். வேறு வகையில் எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்க முடியாது’’ என்றார்.
Comments