400 கோடிக்கு படம், இத்தனை கோடிக்கு இன்சூரன்சா? பிரமாண்டத்துக்கு ஒரு அளவில்லையா சாமி?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் எடுத்து வருகிறார். முதல் முழுநீள தமிழ் 3டி திரைப்படம். ரஜினிக்கு ஜோடி எமி ஜாக்சன். வில்லன் பாலிவுட் ஹீரோ அக்சய் குமார்.
இந்த வருடம் வெளிவர இருக்கும் இந்த படத்தின் பட் ஜெட் 400 கோடி என்று
சொல்லுகிறார்கள். இப்போது 350 கோடிக்கு இந்த படத்தை இன்சூர் செய்துள்ளார்களாம். அமீர்கான் நடித்த பீகே படத்திற்கு தான் 300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.
பிரமாண்ட பாகுபலிக்கே 110 கோடிகள் தான் இன்சூரன்ஸ். எந்திரனுக்கு 100 கோடிகள் இன்சூரன்ஸ்.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் வேறெந்த படத்திற்கும் இதுவரை செய்யவில்லை என்பது பெரிய சாதனை.
댓글