“ஜெயா இழப்பை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது” சாதிப்பாரா ரஜினி?
![](https://static.wixstatic.com/media/d572ed_1d4fa58d659642c5b8a4169fb8dba58b~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_1d4fa58d659642c5b8a4169fb8dba58b~mv2.jpg)
நடிகர் ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை சில அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஜெயா இறப்பு, மத்தியில் ஆட்சி இதை வைத்து எப்படியும் தமிழகத்தில் காய் நகர்த்தி விட வேண்டும் என நினைக்கிறதாம் பா.ஜ.க. இதற்கு ஒரே துருப்பு சீட்டாக ரஜினியை கருதுகிறார்களாம். இதற்கு ஆதரவாக பா.ஜ.க பிரபலங்கள் மற்றும் சில பத்திரிக்கைகள் முழு மூச்சில் களமிறக்கி விடப்பட்டிருக்கின்றனவாம். காங்கிரஸ் தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரசிகர் மன்றத்தை தூசி தட்டியுள்ளாராம் ரஜினி. ஜெயாலலிதா இழப்பை உங்களால் தான் சரி செய்ய முடியும். தனியாக கட்சி துவங்குங்கள் வேறு கட்சிகளில் சேரவேண்டாம் என்கின்றனராம் முக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள். அதிலும் குறிப்பாக பா.ஜ.கவை தேர்வு செய்ய வேண்டாம் என்பதில் அவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்பலை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்தாலும் மாணவர் போராட்டத்தால் அது இன்னும் அதிகரித்துவிட்டதால், உங்களது சொந்த செல்வாக்கையும் அது பாதித்து விடும் என எச்சரித்துள்ளனராம். தனியாக கட்சி தொடங்கி, உதிரி கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்பது தான் அந்த முக்கிய நிர்வாகிகளின் சாய்ஸ் ஆம். அதே நேரம் சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் ரஜினிக்கு சாதகமாக இல்லை. கழுவி ஊத்துகின்றனர். அரசியலே எனக்கு வேண்டாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகவும் சில செய்திகள் பரவி வருகின்றன
Comments