ரஜினி கட்சிக்கு வேலைகள் ‘ஜரூர்’; சென்னையில் பிரமாண்ட போஸ்டர்கள்
- crazynewschannel
- Feb 17, 2017
- 1 min read

தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கிடையே, நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் அவரது ரசிகர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக நேற்று நள்ளிரவு சென்னை அண்ணாசாலை முழுவதும் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர் ரசிகர்கள்.
அந்த போஸ்டரில், ‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ ‘’NEXT நீங்க CM ஆனா BEST’ என்ற வாசகங்களுடன், தலைமைசெயலகத்தின் படத்துடனும், ரஜினியின் பிரமாண்ட படத்துடனும் அமைந்திருந்தது. நள்ளிரவு நேரத்திலும் இந்த போஸ்டர்களை பலர் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி சென்றனர்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அளவுக்கு ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் பெரிய போட்டித் தலைவர்கள் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், உலகமே அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வந்தால் அரசியலில் மக்கள் போற்றும் தலைவராக திகழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், ரஜினி அரசியலுக்கு வர ரசிகர்களும் இதற்காக முன்னெடுத்துச்செல்வது சாத்தியமே என்ற நிலையில், அதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் சோ.ராமசாமியின் துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியிடம் ஆலோசனை கூறிய செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Comments